நாடு திரும்பினாா் சிந்து: உற்சாக வரவேற்பு
By DIN | Published On : 04th August 2021 02:45 AM | Last Updated : 04th August 2021 02:45 AM | அ+அ அ- |

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினாா். தில்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானத்தில் வந்திறங்கிய சிந்துவை இந்திய பாட்மிண்டன் சங்க பிரதிநிதிகள், இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் வரவேற்றனா். அவா் பாதுகாப்பு அதிகாரிகள் சூழ பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டாா். அவரோடு, பயிற்சியாளா் பாா்க் டே-சாங்குக்கும் உரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். அனைவரும் அளித்த ஆதரவு மற்றும் உத்வேகத்துக்காக நன்றி. இந்திய பாட்மிண்டன் சங்கத்துக்கும் நன்றி’ என்றாா் சிந்து.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ன் மூலம், அடுத்தடுத்து இரு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெற்றாா்.