4 ஆண்டுகளில் வலியை சிரிப்பாக மாற்றிய ஸ்ரீஜேஷ்: வைரலாகும் ட்வீட்கள்

டோக்கியோ ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ட்விட்டர் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
4 ஆண்டுகளில் வலியை சிரிப்பாக மாற்றிய ஸ்ரீஜேஷ்: வைரலாகும் ட்வீட்கள்


டோக்கியோ ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ட்விட்டர் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

டோக்கிய ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை.

ஜெர்மனியுடனான வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. இறுதிக் கட்டத்தில் கடைசி 6 விநாடிகளில் ஜெர்மனிக்குக் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பு கோலாக மாற வேண்டிய தருணத்தில் தனது சிறப்பான ஆட்டத்தால் பந்தைத் தடுத்து நிறுத்தி இந்தியாவின் 41 ஆண்டுகள் தாகத்தைத் தீர்த்து வைத்தார்.

இந்தியப் பெருஞ்சுவர் என்று கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் அழைக்கப்பட்டு வரும் நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அந்தப் பெயரை தன்வசப்படுத்திக்கொண்டுள்ளார் ஸ்ரீஜேஷ். இந்த இந்தியப் பெருஞ்சுவரின் ட்வீட்கள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

2016 ரியோ ஒலிம்பிக்கில் ஸ்ரீஜேஷ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி காலிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. அப்போது அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

"ரியோ முடிந்தது.. வலி இருக்கிறது.. அனைவரையும் ஏமாற்றமடையச் செய்ததற்கு மன்னிக்கவும்.."-இது 2016 ரியோ ஒலிம்பிக்குக்குப் பிறகான அவரது ட்விட்டர் பதிவு.

"தற்போது நான் சிரிக்கலாம்"-இது பதக்கம் வென்று அவர் பதிவிட்டுள்ள பதிவு.

இந்த இரு பதிவுகளையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவரைப் பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com