ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோல்வி

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பஜ்ரங் புனியா பங்கேற்கவுள்ளார்.
ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோல்வியடைந்துள்ளார். 

இன்று நடைபெற்ற ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் முதல் ஆட்டத்தில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த எர்னாசரையும் காலிறுதியில் ஈரானின் மொர்டசாவையும் எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா. இரு ஆட்டங்களிலும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

அரையிறுதியில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மூன்று முறை உலக சாம்பியனான அஜர்பைஜானைச் சேர்ந்த ஹாஜி அலியேவுடன் மோதினார் பஜ்ரங் புனியா. ஆரம்பத்தில் முதல் புள்ளியை எடுத்தார் பஜ்ரங் புனியா. அதன்பிறகு ஹாஜி அலியேவ், ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளைச் சேர்த்தார். முதல் பாதியில் 4-1 என முன்னிலை பெற்றார். இதன்பிறகு பஜ்ரங் புனியா போராடி சில புள்ளிகளை எடுத்தார். எனினும் இறுதியில் 11-5 என்கிற புள்ளிக்கணக்கில் பஜ்ரங் புனியாவை ஹாஜி அலியேவ் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பஜ்ரங் புனியா பங்கேற்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com