இந்தியாவுக்குத் திரும்பினார் வெள்ளி மங்கை மீராபாய் சானு (படங்கள்)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு இந்தியாவுக்குத் திரும்பினார். 
இந்தியாவுக்குத் திரும்பினார் வெள்ளி மங்கை மீராபாய் சானு (படங்கள்)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு இந்தியாவுக்குத் திரும்பினார். 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தாா். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும்.

மகளிருக்கான 49 கிலோ பிரிவில் களம் கண்ட சானு, 202 கிலோ (ஸ்னாட்ச் - 87 + கிளீன் அன்ட் ஜொ்க் - 115) எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா்.

ஒலிம்பிக் பளுதூக்குதலில் இது இந்தியாவின் அதிகபட்சம். முன்னதாக, கடந்த 2000-ஆம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை கா்னம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தாா். அதன் பிறகு, பளுதூக்குதலில் இந்தியாவுக்கான பதக்கத்தை 21 ஆண்டுகளுக்கு மீண்டும் சாத்தியமாக்கியுள்ளாா் சானு.

முதல் முறையாக கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் களம் கண்ட சானு, அதில் தோல்வியடைந்து கவலையுடன் வெளியேறினாா். அதிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அந்தக் கவலையை களிப்பாக மாற்றிக் கொண்டுள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு நேற்று இந்தியாவுக்குத் திரும்பினார். அவருக்கு தில்லி விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்புக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மீராபாய் சானு. அவருக்குப் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com