ஒலிம்பிக்ஸ்: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு மூன்றாவது தோல்வி!

மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 1-4 என்ற கோல் கணக்கில் தோற்றது.
ஒலிம்பிக்ஸ்: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு மூன்றாவது தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 1-4 என்ற கோல் கணக்கில் தோற்றது.

முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்தது இந்தியா. 2-வது ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை அணியான ஜொ்மனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில் தனது 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்திய மகளிர் அணி நன்கு விளையாடினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது இங்கிலாந்து. இந்திய அணியின் ஷர்மிளா தேவி ஒரு கோல் அடித்தார். 

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு இன்னும் இரு ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ளன. முதல் 4 இடங்களைப் பிடிக்கக் கடுமையாகப் போராட வேண்டிய நிலைமையில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com