விரேந்திர சேவாக்கின் 39-ஆவது பிறந்தநாளை சிறப்பித்த சச்சின் டெண்டுல்கரின் 'உல்டா' ட்வீட்

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் இன்று தனது 39-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
விரேந்திர சேவாக்கின் 39-ஆவது பிறந்தநாளை சிறப்பித்த சச்சின் டெண்டுல்கரின் 'உல்டா' ட்வீட்
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராகத் திகழ்ந்தவர் விரேந்திர சேவாக். தில்லியைச் சேர்ந்த இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கியவர்.

சந்திக்கும் முதல் பந்தையே சிக்ஸருக்கு விரட்டுவதுதான் இவரது தனிச்சிறப்பு. எதிரணி, ஆடுகளம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் பந்துகளை சிதறடிப்பதுதான் இவரது தனித்துவம். இதனாலேயே சேவாக் களமிறங்கினாலே இந்திய ரசிகர்களுக்கு தனி குஷி தான். 

டெஸ்ட் போட்டிகளில் 150, 200 ரன்கள் மிக எளிதில் சேர்த்து விடுவார். இதனாலேயே தனது அடுத்த பிறவியிலாவது சேவாக் போன்று ஆட வேண்டும் என ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோர்களை எடுக்கவும், விரட்டவும் இவரது அதிரடி துவக்கம் தான் உதவும்.

டெஸ்ட் அரங்கில் இரு முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே இந்தியர் சேவாக் தான். மேலும், சச்சினுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசிவரும் இவர்தான். முதலில் நடுவரிசை வீரராக களமிறங்கியவிரன் அதிரடி திறமையைப் பார்த்து அவரை துவக்க வீரராக உயர்த்தியவர் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி.

இந்திய அணிக்கு தேவைப்படும் போது எல்லாம் இவரது சுழற்பந்துவீச்சு கைகொடுக்கும். இந்திய அணிக்காக மொத்தம் 13 ஆண்டுகாலம் விளையாடியவர். மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 49.34 ஆகும். இதில் 23 சதங்கள் அடங்கும். 

251 ஒருநாள் போட்டிகளில் களம் கண்ட சேவாக், 8,273 ரன்களை விளாசியுள்ளார். இதில் 15 சதங்கள் குவித்துள்ளார். 19 டி20 போட்டிகளில் விளையாடி 394 ரன்கள் சேர்த்தார். அதுபோல ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதில் 104 போட்டிகளில் பங்கேற்று 2,728 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில், விரேந்திர சேவாக் இன்று (அக். 20-ந் தேதி) தனது 39-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் உலகின் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ரசிகர்களுக்கும் தங்கள் வாழ்த்துகளை அவரது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக பரிமாறி வருகின்றனர்.

இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்த்து சற்று வித்தியாசமாக அமைந்தது. அதுகுறித்து அவர் குறிப்பிட்டதாவது, எப்போதும் நான் கூறுவதற்கு அப்படியே தலைகீழாக (உல்டாவாக) செய்யும் உனக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து என்று இருந்தது. அதற்கு கிரிக்கெட்டின் கடவுளுக்கு நன்றி என சேவாக் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com