விராட் கோலி சதம், அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்து புது சாதனை

விராட் கோலி சதம், அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்து புது சாதனை

கான்பூரில் நடைபெற்று வரும் 3-ஆவது ஒருநாள் போட்டியில்...

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். இதன்மூலம் புதிய சாதனையையும் படைத்தார்.

சாதனைத் துளிகள்

இப்போட்டியின் மூலம் விராட் கோலி தனது 32-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இதனால் சதமடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து 2-ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்தவர் என்ற புதிய சாதனைப் படைத்தார். மொத்தம் 194 இன்னிங்ஸ்களில் இச்சாதனையைப் புரிந்தார்.

டிவில்லியர்ஸ் 205, கங்குலி 228, டெண்டுல்கர் 235, லாரா 239 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களை அதிவேகமாக கடந்தவர்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக விராட் கோலி அடித்த 5-ஆவது சதமாகும். இதன்மூலம் சச்சின், ஜெயசூரியாவுடன் இலங்கைக்கு எதிராக அதிக ஒருநாள் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்தார். 6 சதங்களுடன் பாண்டிங், சேவாக் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

2017-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 6 சதங்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒரு ஆண்டில் கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 2000-ம் ஆண்டில் கங்குலி, 2003,2007-ம் ஆண்டுகளில் பாண்டிங், 2005-ம் ஆண்டில் ஸ்மித், 2015-ம் ஆண்டில் டிவில்லியர்ஸ் ஆகியோர் தலா 5 சதங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டனாக அடித்த 10-ஆவது சதமாக இது அமைந்தது.

ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 2017-ம் ஆண்டில் தற்போது வரை 1437 ரன்களைக் குவித்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

ரிக்கி பாண்டிங் 2007-ம் ஆண்டில் 1424 ரன்களும், மிஸ்பா-உல்-ஹக் 2013-ம் ஆண்டில் 1373 ரன்களும், அசாரூதின் 1998-ம் ஆண்டில் 1268 ரன்களும், மாத்யூஸ் 2014-ம் ஆண்டில் 1244 ரன்களும் எடுத்து இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com