ஆஸி.,க்கு எதிராக 50 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரோஹித் சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் போட்டியில் 50 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரோஹித் ஷர்மா புதிய சாதனைப் படைத்தார்.
ஆஸி.,க்கு எதிராக 50 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரோஹித் சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் போட்டியில் 50 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரோஹித் ஷர்மா புதிய சாதனைப் படைத்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3-0 என இந்தியா தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களைக் குவித்தது.

துவக்க வீரர் டேவிட் வார்னர் தனது 100-ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்து (124 ரன்கள்) அசத்தினார். மற்றொரு துவக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் தொடர்ந்து 2-ஆவது சதமடிக்கும் வாய்ப்பை 94 ரன்களுக்கு அவுட்டாகி இழந்தார். 

இதையடுத்து 335 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா, அஜிங்க்ய ரஹானே ஜோடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தியது. அஜிங்க்ய ரஹானே 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஹாட்ரிக் அரைசதங்கள் அடித்து அசத்தினார்.

ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 50 சிக்ஸர்களை பறக்கவிட்ட முதல் பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லை எட்டினார்.

இப்போட்டியில் 5 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 27 ஆட்டங்களில் 53 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனைப் படைத்தார். மேலும், ஒரு அணிக்கு எதிராக 50 சிக்ஸர்களை விளாசிய 3-ஆவது வீரர் ஆவார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்தபட்சம் 15 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர்களில் அதிக சராசரி கொண்ட பேட்ஸ்மேனாகவும் ரோஹித் ஷர்மா திகழ்கிறார்.

அதுபோல இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த ஒருநாள் கேப்டன் என்ற புதிய சாதனைப் படைத்தார். இதுபோன்று 1,000 ரன்களைக் கடந்ததும் விராட் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com