ஐபிஎல் போட்டியிலிருந்து நாகர்கோடி விலகல்! புதிய வீரரைத் தேர்வு செய்தது கொல்கத்தா!
வேகப்பந்துவீச்சாளரான இவரை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3.20 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா அணி...


காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கொல்கத்தா ஐபிஎல் அணி வீரர் கமலேஷ் நாகர்கோடி, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பையில் சாம்பியன் ஆன இந்திய அணியில் இடம்பிடித்தவர், நாகர்கோடி. வேகப்பந்துவீச்சாளரான இவரை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3.20 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா அணி.
இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து நாகர்கோடி விலகியுள்ளார். இதையடுத்து கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை கொல்கத்தா அணி தேர்வு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...