

தில்லி அணியைச் சேர்ந்த கிறிஸ் மோரிஸ் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
தில்லி அணி இந்த வருடம் தக்கவைத்துக்கொண்ட ஒரே வீரர், தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸ். அவருடைய ஊதியம் - ரூ. 7.10 கோடி.
4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மோரிஸ், 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். எகானமி - 10.21. பேட்டிங்கில் 46 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 176.92. எனினும் அவர் காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான ஜூனியர் டாலாவைத் தேர்வு செய்துள்ளது தில்லி அணி. 28 வயது டாலா, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகி தன்னுடைய அற்புதமான வேகப்பந்துவீச்சினால் அனைவரையும் கவர்ந்தார். 3 டி20 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 9.16.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.