ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி மாட்டிக்கொண்ட இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர்கள்: நடுவர் புகார்!

இருவருடைய நடவடிக்கைகளும் விமரிசனங்களுக்கு ஆளாகின. சர்வதேச வீரர்களுக்குரிய மரியாதையைத் தராமல்...
ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி மாட்டிக்கொண்ட இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர்கள்: நடுவர் புகார்!
Published on
Updated on
1 min read

கொல்கத்தா வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மாவி, தில்லி வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் ஆகிய இருவரும் ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளதாக நடுவர் புகார் அளித்துள்ளார். 

கொல்கத்தாவை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் தனது தொடர் தோல்விக்கு தில்லி அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தில்லி டேர் டேவில்ஸ்-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் 26-வது ஆட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. தில்லி அணியின புதிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 93 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தில்லி அணி 219 ரன்களை குவித்திருந்தது. கொல்கத்தா தரப்பில் சாவ்லா, சிவம் மவி, ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். வெற்றி இலக்காக 220 ரன்களை எதிர்கொண்ட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தில்லி தரப்பில் பெளல்ட், மேக்ஸ்வெல், அவேஷ் கான், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் தில்லி அணி பேட்டிங் செய்தபோது அதன் தொடக்க வீரர் மன்ரோவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷிவம் மாவி. அப்போது மன்ரோவிடம் ஆக்ரோஷமாகத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அதேபோல கொல்கத்தா அணி பேட்டிங் செய்தபோது ஆண்ட்ரே ரஸ்ஸலின் விக்கெட்டை வீழ்த்திய தில்லி வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான், அவர் முன்பு தனது ஆக்ரோஷத்தை
வெளிப்படுத்தினார். இருவருடைய நடவடிக்கைகளும் விமரிசனங்களுக்கு ஆளாகின. சர்வதேச வீரர்களுக்குரிய மரியாதையைத் தராமல் அவமதித்தாக கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இருவரும் ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளதாகப் போட்டி நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள். மாவி, அவேஷ் கான் இருவரும் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டதாக ஐபிஎல் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. லெவல் 1 குற்றம் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளதால் அபராதமோ தடையோ விதிக்கப்படாது. எனினும் இருவருடைய நடவடிக்கைகள் மீதும் நடுவர்கள் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்புண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com