'500 சர்வதேசப் போட்டிகள்' சச்சின், டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 'தல' தோனி!

'500 சர்வதேசப் போட்டிகள்' சச்சின், டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 'தல' தோனி!

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 500-ஆவது போட்டியில் மகேந்திர சிங் தோனி களமிறங்கினார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தற்போதைய இளம் இந்திய அணியின் குருவாக (பயிற்சியாளர்) கருதப்படும் ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 3-ஆவது இந்தியராக தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இச்சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 500-ஆவது போட்டியாக அமைந்தது. மேலும் உலகளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9-ஆவது வீரராகவும் திகழ்கிறார்.

இதுவரை 90 டெஸ்ட், 318 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் தோனி பங்கேற்றுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 

டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 33 அரைசதம் உட்பட 4,876 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 10 சதம், 67 அரைசதம் உட்பட 9,967 ரன்களும், டி20 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 1,455 ரன்களும் குவித்துள்ளார். மேலும் மொத்தம் 602 கேட்சுகளும், 178 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார்.

இந்த வரிசையில் 200 டெஸ்ட், 463 ஒருநாள், மற்றும் ஒரு டி20-யுடன் 664 போட்டிகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 164 டெஸ்ட், 344 ஒருநாள் மற்றும் ஒரு டி20-யுடன் 509 போட்டிகளுடன் ராகுல் டிராவிட் 8-ஆவது இடத்திலும் உள்ளனர்.

500 சர்வதேசப் போட்டிகளுக்கு மேல் பங்கேற்ற வீரர்களின் விவரம் பின்வருமாறு:

  • சச்சின் டெண்டுல்கர் - 664
  • மஹேல ஜெயவர்தனெ  - 652 
  • குமார் சங்ககாரா - 594
  • சனத் ஜெயசூர்யா - 586
  • ரிக்கி பாண்டிங் - 560
  • ஷாஹித் அஃப்ரிடி - 524
  • ஜாக்கஸ் கலீஸ் - 519
  • ராகுல் டிராவிட் - 509
  • மகேந்திர சிங் தோனி - 500*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com