பெங்களூருக்கு எதிராக சென்னை பந்துவீச்சு: இரு அணிகளிலும் தலா மூன்று மாற்றங்கள்!
சென்னை - பெங்களுர் இடையேயான ஐபிஎல் ஆட்டம் இன்று புணேவில் இன்று தொடங்கியுள்ளது.


சென்னை - பெங்களுர் இடையேயான ஐபிஎல் ஆட்டம் புணேவில் இன்று தொடங்கியுள்ளது.
காய்ச்சல் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் விளையாடாத டிவில்லியர்ஸ் இன்றைய ஆட்டத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த வருட ஐபிஎல் ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் 280 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக், ஒரு திருமணத்துக்குச் செல்லவேண்டியிருப்பதால் தென் ஆப்பிரிக்காவுக்குப் பறந்துள்ளார்.
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
சென்னையில் அணியில் மூன்று மாற்றங்கள். டுபிளெஸ்ஸிஸ், கரண் சர்மா, ஆசிஃப் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக துருவ் ஷோரே, டேவிட் வில்லி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். வில்லி, ஷோரே ஆகிய இருவரும் ஐபிஎல்-லில் இந்த ஆட்டத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார்கள். கடந்த ஆட்டத்தில் மோசமாக விளையாடி விமரிசனங்களுக்கு ஆளான ஜடேஜா, அணியில் நீடிக்கிறார்.
அதேபோல பெங்களூர் அணியிலும் மூன்று மாற்றங்கள். டி காக், வோரா, வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக டி வில்லியர்ஸ், பார்தீவ் படேல், எம். அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...