
11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 35-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புணேவில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்திவ் படேல் 53, டிம் சௌத்தி 36* ரன்கள் சேர்த்தனர். சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 32, தோனி 31* ரன்கள் எடுத்தனர். இப்போட்டியின் மூலம் மகேந்திர சிங் தோனி இரு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகள் செய்தவர்கள் பட்டியலில் ராபின் உத்தப்பாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார். ஐபிஎல் அதிக ஸ்டம்பிங் செய்த கீப்பர்கள் விவரம் பின்வருமாறு:
அதுபோல நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பான அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் தோனி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசி புது சாதனையைப் படைத்துள்ளார். ஒரு சீசனில் தோனியின் அதிகபட்ச சிக்ஸர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.