4 ஆயிரம் ரன்களுடன் முதல் 'கீழ்வரிசை' வீரர்: 'தல' தோனி மகத்தான சாதனை!

ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்து மகேந்திர சிங் தோனி புது சாதனைப் படைத்துள்ளார்.
4 ஆயிரம் ரன்களுடன் முதல் 'கீழ்வரிசை' வீரர்: 'தல' தோனி மகத்தான சாதனை!

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் மூலம் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி, புது சாதனைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த 7-ஆவது வீரர் என்ற மைல்கல்லை எட்டினார். இருப்பினும், இதைச் செய்த முதல் கீழ்வரிசை வீரர் (துவக்க வீரர்கள் அல்லாத 2-ஆவது நடுவரிசை வீரர்) தோனி ஆவார். ஏனெனில் பெரும்பாலான ஆட்டங்களில் 5 அல்லது 6-ஆவது வரிசைகளிலேயே களமிறங்கியுள்ளார். முதல் நடுவரிசை வீரராக 4,931 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா இந்தப் பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளார். இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் 3-ஆவது நிலையிலேயே ரெய்னா களமிறங்கியுள்ளார்.

இதில், 3,433 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், இதர ரன்கள் ரைசிங் புணே சூப்பர்ஜெயின்ட் அணிக்காகவும் எடுத்துள்ளார். 3,859 ரன்களை விக்கெட் கீப்பராகவும் (காயம் காரணமாக சில போட்டிகளில் விக்கெட் கீப்பராக களமிறங்கியதில்லை), 3,717 ரன்களை கேப்டனாகவும் (புணே அணியில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்) குவித்துள்ளார்.

இந்த பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ள ஒரே வெளிநாட்டு வீரரான டேவிட் வார்னரை விட 7 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். அதுபோல அதிக ரன்கள் குவித்தவர்களில் தோனியை விட 9 ரன்கள் குறைவாக 3,998 ரன்களுடன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் வீரர் ஷிகர் தவன் 8-ஆவது இடத்தில் உள்ளார்.

4 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களின் மொத்த ரன்கள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அணிகள் தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:

  • 4,948 - விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • 4,931 - சுரேஷ் ரெய்னா - சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ்
  • 4,493 - ரோஹித் ஷ்ரமா - டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ்
  • 4,217 - கௌதம் கம்பீர் - தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • 4,124 - ராபின் உத்தப்பா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், புணே வாரியர்ஸ் இந்தியா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • 4,014 - டேவிட் வார்னர் - தில்லி டேர்டெவில்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
  • 4,007 - மகேந்திர சிங் தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ், ரைஸிங் புணே சூப்பர்ஜெயின்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com