கரீபியன் கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்த 'யூனிவர்ஸல் பாஸ்' கிறிஸ் கெயில்!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வரலாற்றில் 'யூனிவர்ஸல் பாஸ்' கிறிஸ் கெயில் புதிய சகாப்தம் படைத்தார். இந்தியாவுடனான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தின்போது ஜாம்பான் வீரர் பிரையன் லாராவை முந்தி 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் எனும் அரிய சாதனையைப் படைத்தார்.
இவற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 297 ஆட்டங்களிலும், உலக லெவன் அணிக்காக 3 ஒருநாள் ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பிரையன் லாரா 19 சதங்களும், 62 அரைசதங்களும் குவித்துள்ளார். கிறிஸ் கெயில் 25 சதங்களும், 52 அரைசதங்களும் விளாசியுள்ளார்.
இதன்மூலம் மேலும் சில சாதனைகளையும் தன்வசப்படுத்தினார். அதன் விவரங்கள் பின்வருமாறு:
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரை 297 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள கிறிஸ் கெயில் 10,353* ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக மொத்த ரன்கள் குவித்தள்ள மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.
25* சதங்கள் - இதுவே மே.இ.தீவுகள் வீரர் ஒருநாள் போட்டிகளில் குவித்த அதிகபட்ச மொத்த சதங்களாகும்.
அதிகபட்சம் 215 - இதுவே மே.இ.தீவுகள் பேட்ஸ்மேனால் ஒரு இன்னிங்ஸில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். மேலும் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் கெயில் வசம் உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (325*) விளாசிய வீரராக திகழ்கிறார்.
மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் (123*) பிடித்த மே.இ.தீவுகள் வீரராகவும் உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த மே.இ.தீவுகள் வீரர்:
- 10,349* கிறிஸ் கெயில்
- 10,348 பிரையன் லாரா
- 8,778 ஷிவ்நரேன் சந்திரபால்
- 8,648 டெஸ்மண்ட் ஹெயின்ஸ்
- 6,721 விவியன் ரிச்சர்ட்ஸ்
- 6,248 ரிச்சி ரிச்சர்ட்ஸன்
அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள முதல் 5 மே.இ.தீவுகள் வீரர்:
- கிறிஸ் கெயில் - 297*
- பிரையன் லாரா - 295
- ஷிவ்நரேன் சந்திரபால் - 268
- டெஸ்மண்ட் ஹெயின்ஸ் - 238
- கார்ல் ஹூப்பர் - 227
அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள முதல் 5 வீரர்கள்:
- சச்சின் டெண்டுல்கர் - 463
- மஹேலா ஜெயவர்தனே - 448
- சனத் ஜெயசூர்யா - 445
- குமார் சங்ககாரா - 404
- ஷாஹித் அஃப்ரிடி - 398
- (இந்தப் பட்டியலில் 300 ஒருநாள் ஆட்டங்களுடன் கிறிஸ் கெயில் 21-ஆவது இடத்தில் உள்ளார்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

