கங்குலி அல்ல, தோனியும் அல்ல, விராட் கோலியே இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்! முழு விவரங்கள்!

இந்த வெற்றியின் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி... 
கங்குலி அல்ல, தோனியும் அல்ல, விராட் கோலியே இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்! முழு விவரங்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்றன. 

இந்திய அணி, முதல் டெஸ்டை 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் 2-வது டெஸ்டை இந்திய அணி, 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றுள்ளது. இதன்மூலம் 120 புள்ளிகள் பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்திய அணி.

இந்த வெற்றியின் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. 28 டெஸ்ட் வெற்றிகளுடன் தோனியின் சாதனையை அவர் தாண்டியுள்ளார். 

அதிக டெஸ்ட் வெற்றிகள்: இந்திய கேப்டன்கள்

28 கோலி (48 டெஸ்டுகள்)
27 தோனி (60)
21 கங்குலி (49)
14 அசாருதீன் (47) 

வெளிநாடுகளில் அதிக வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்

13 கோலி (27 டெஸ்டுகள்)
11 கங்குலி (28)
6 தோனி (30)
5 டிராவிட் (17)

ஆசியாவுக்கு வெளியே அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற ஆசிய நாடுகளின் கேப்டன்கள்

8 - விராட் கோலி, மிஸ்பா உல் ஹக்
6 - கங்குலி
4 - முஸ்டாக் முகமது, ஜாவத் மியாண்டட், வாசிம் அக்ரம், சலிம் மாலிக், தோனி. 

வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற ஆசிய நாடுகளின் கேப்டன்கள்

26 - மிஸ்பா உல் ஹக்
13 - விராட் கோலி
11 - கங்குலி

(மிஸ்பா உல் ஹக்கின் வெற்றிகளில் ஐக்கிய அரபு அமீரக வெற்றிகளைக் கழித்துவிட்டால் வெளிநாடுகளில் அவர் அடைந்த வெற்றிகள் - 13)

முதல் 48 டெஸ்டுகளில் அதிக வெற்றிகள் கண்ட கேப்டன்கள் 

36  ஸ்டீவ் வாஹ்
33 ரிக்கி பாண்டிங்
28 விராட் கோலி
26 விவ் ரிச்சர்ட்ஸ்
26 மைக்கேல் வான்

டெஸ்ட்: கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது... (வெற்றி சதவிகிதம் 82.14%)

டெஸ்டுகள் 28
வெற்றி 23
தோல்வி 1 
டிரா 4

டெஸ்ட்: கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீசியபோது... (வெற்றி சதவிகிதம் 25%)

டெஸ்டுகள் 20
வெற்றி 5
தோல்வி 9
டிரா 6

வெளிநாட்டு டெஸ்ட்: கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது... (வெற்றி சதவிகிதம் 81.25%)

டெஸ்டுகள் 16
வெற்றி 13
தோல்வி 1 
டிரா 2

வெளிநாட்டு டெஸ்ட்: கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீசியபோது... (வெற்றி சதவிகிதம் 0.00%)

டெஸ்டுகள் 11
வெற்றி 0
தோல்வி 8
டிரா 3

கோலி தாண்டவேண்டிய முக்கியச் சாதனைகள் என்ன? 

கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் - 8659 ரன்கள் (கிரீம் ஸ்மித்)
கேப்டனாக அதிக சதங்கள் எடுத்தவர் - 25 (கிரீம் ஸ்மித்)
அதிக டெஸ்ட் வெற்றிகள் - 53 வெற்றிகள் (109 டெஸ்டுகள்)

அடுத்ததாக, இந்த மூன்று முக்கிய சாதனைகளையும் வீழ்த்தி உலகின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற பெருமையை விராட் கோலி அடைவாரா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com