2017 ஜனவரி 4 அன்று இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். 2014-ல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. 2007 முதல் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
ஒரு கேப்டனாக இன்றைக்கும் தோனி வசம் உள்ள சாதனைகள்
* 199 ஒருநாள் போட்டிகளிலும் (110 வெற்றிகள், 74 தோல்விகள்) 72 டி20 போட்டிகளிலும் (41 வெற்றிகள், 28 தோல்விகள்) தோனி கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல 60 டெஸ்டுகளிலும் (27 வெற்றிகள், 18 தோல்விகள்).
* டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், தோனி மட்டுமே.
* ஒரு கேப்டனாக அதிக டி20 ஆட்டங்களில் (41) வென்றவர் - தோனி. இன்றுவரை அந்தச் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அடுத்த இடத்தில் 39 வெற்றிகளுடன் உள்ளவர் - ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்கார் ஆஃப்கன்.
* ஒருநாள் ஆட்டங்கள் இன்றுவரை அதிக வெற்றிகள் கண்ட கேப்டன்களில் தோனிக்கு 2-ம் இடம். பாண்டிங் 165 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு 110 வெற்றிகள். இந்திய அளவில் அதிக ஒருநாள் ஆட்டங்களில் வெற்றி அடைந்தவர், தோனி.
* அதிக டி20 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர் - தோனி. 72 ஆட்டங்கள். 2-ம் இடத்தில் அயர்லாந்தின் போர்டர்ஃபீல்ட் - 56 ஆட்டங்கள்.
* 199 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார் தோனி. இந்திய அளவில் முதல் இடம், உலகளவில் தோனிக்கு 3-ம் இடம்.
* ஒருநாள் ஆட்டங்களின் வெற்றி விகிதத்தில் சிறந்த இந்திய கேப்டனாக உள்ளவர் கோலி. 89 ஆட்டங்களில் 62 வெற்றிகள், 24 தோல்விகளுடன் 2.583 விகிதம் கொண்டுள்ளார். அடுத்த இடத்தில் தோனி - 1.486.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலுக்கு இரண்டு குளிா்சாதன இயந்திரம் நன்கொடை

வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்

திருமணக் கோலத்துடன் வாக்களித்த புதுமண தம்பதிகள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


