அஜாஸ் படேலும் 10 விக்கெட்டுகளும்: முக்கிய அம்சங்கள்

எட்டு வயதில் மும்பையை விட்டுப் பிரிந்த அஜாஸ் படேல், 25 வருடங்கள் கழித்து அதே ஊரில்...
அஜாஸ் படேலும் 10 விக்கெட்டுகளும்: முக்கிய அம்சங்கள்

47.5 ஓவர்கள் - 119 ரன்கள் - 10 விக்கெட்டுகள்.

வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் அஜாஸ் படேல். 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109.5 ஓவர்களில் 325 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்துச் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார்.

* டெஸ்ட்: ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்

ஜிம் லேகர் - 10-53 vs ஆஸ்திரேலியா, 1956
அனில் கும்ப்ளே = 10-74, vs பாகிஸ்தான், 1999
அஜாஸ் படேல் - 10-119, vs இந்தியா, 2021

* மும்பையில் பிறந்து வளர்ந்தவர் அஜாஸ் படேல். அவருடைய பெற்றோர், உறவினர்கள் மும்பையில் வசிக்கிறார்கள். தன் சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். எட்டு வயதில் மும்பையை விட்டுப் பிரிந்த அஜாஸ் படேல், 25 வருடங்கள் கழித்து அதே ஊரில் சாதித்துள்ளார். எனினும் கரோனா காரணமாகத் தன்னுடைய பெற்றோர், டெஸ்டைப் பார்க்க மும்பை மைதானத்துக்கு வரவில்லை என அஜாஸ் படேல் கூறியுள்ளார்.

* இது 2438-வது டெஸ்ட். இத்தனை டெஸ்டுகளில் 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனைத்து 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்கள்.

* அனில் கும்ப்ளே சொன்னது போல முதல் இரு நாள்களில் 10 விக்கெட்டுகளையும் எடுத்தது பெரிய சாதனை. ஜிம் லேகர், அனில் கும்ப்ளே ஆகிய இருவரும் கடைசி நாள்களில் தான் 10 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

* ஜிம் லேகர், அனில் கும்ப்ளே ஆகிய இருவரும் சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகளை எடுத்தார்கள். வெளிநாட்டு டெஸ்டில் 10 விக்கெட்டுகளையும் முதல் பந்துவீச்சாளர், அஜாஸ் படேல். 

* பாகிஸ்தானுக்கு எதிராக அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை எடுத்தபோது அந்த ஆட்டத்தில் பங்கேற்ற ராகுல் டிராவிடும் ஜவகல் ஸ்ரீநாத்தும் இன்றைய சாதனையையும் நேரில் பார்த்துள்ளார்கள். டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் ஸ்ரீநாத் டெஸ்ட் போட்டியின் நடுவராகவும் பணியாற்றுகிறார்கள். 

* முதல்முறையாக இடக்கை பந்துவீச்சாளர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com