சர்வதேசபாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக 14-ஆவது இடத்தில் இருந்த ஸ்ரீகாந்த், இப்போது 5 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். அஜய் ஜெயராம் 9 இடங்களை இழந்து 27-ஆவது இடத்தில் உள்ளார்.
எச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத் ஆகியோரின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் முறையே 31 மற்றும்35-ஆவது இடங்களில் உள்ளனர்.
மகளிர் தரவரிசையைப் பொறுத்தவரையில் முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வரும் சாய்னா, எந்தப் போட்டியிலும் விளையாடாதபோதிலும் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து இரு இடங்கள் முன்னேறி 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.