பயிற்சியின்போது ஆலோசனையில் தோனி, புவனேஷ்வர் குமார்.
பயிற்சியின்போது ஆலோசனையில் தோனி, புவனேஷ்வர் குமார்.

ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா: தப்புமா இங்கிலாந்து?

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. எனவே, தொடரை முற்றிலுமாக கைப்பற்ற கோலியின் படை தயாராகியிருக்கிறது.
மறுமுனையில், இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடருடன் சேர்த்து, தற்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. இந்த இரண்டிலுமே இதுவரை ஒரு வெற்றியை கூட சுவைக்காத நெருக்கடி இங்கிலாந்துக்கு உள்ளது. எனவே, அந்த அணி ஆறுதல் வெற்றி அடைய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும்.
ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியைப் பொருத்த வரையில், இந்திய அணி வீரர்களில் மாற்றம் இல்லை. பேட்டிங்கில் கலக்குவதற்கு கேப்டன் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருடன் கேதர் ஜாதவும் உள்ளார். இவர்களுடன், தோனி, யுவராஜ் போன்ற மூத்த வீரர்கள் துணை நிற்கின்றனர்.
தவன் இந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம். பந்துவீச்சைப் பொருத்த வரையில் பூம்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோர் சுழற்பந்து வீச்சிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பதம் பார்க்க உள்ளனர்.
மறுமுனையில், இங்கிலாந்து அணியில் ஓர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த அலெக்ஸ் ஹேல்ஸýக்கு பதிலாக, ஜானி பேர்ஸ்டோவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
பேட்டிங்கைப் பொருத்த வரையில் கேப்டன் இயான் மோர்கன் வலு சேர்க்கிறார். ஜோ ரூட், ஜேசன் ராய், மொயீன் அலி ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்துவர் என்று எதிர்பார்க்கலாம்.
பந்துவீச்சைப் பொருத்த வரையில் கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால் ஆகியோரிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது.

கோலி இடத்தில் தோனி

கடைசி ஒருநாள் போட்டியை முன்னிட்டு இந்திய அணியினர் ஈடன் கார்டன் மைதானத்தில் சனிக்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பயிற்சியில் கேப்டன் கோலி கலந்துகொள்ளவில்லை.
பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவும் அந்த இடத்தில் இல்லாத நிலையில், தோனி தலைமைப் பண்புடன் செயல்பட்டார். சக வீரர்களுடன் கலந்தாலோசித்து, நுணுக்கங்கள் கற்பித்த அவர், ஆடுகளத்தையும் சோதனை செய்தார்.

அணி விவரம்

இந்தியா: கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், தவன், யுவராஜ் சிங், தோனி (விக்கெட் கீப்பர்),
கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், பூம்ரா, புவனேஷ்வர் குமார், ரஹானே, மணீஷ் பாண்டே, உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா.
இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, லியாம் பிளங்கெட், ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், லியாம் டாசன், ஜானி பேர்ஸ்டோவ், ஆதில் ரஷீத்.

போட்டி நேரம்:

நண்பகல் 1.30
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com