சர்வதேச ஸ்குவாஷ்: காலிறுதியில் அபய் சிங், அகான்ஷா

பிஎஸ்ஏ சார்பில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங், அகான்ஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சர்வதேச ஸ்குவாஷ்: காலிறுதியில் அபய் சிங், அகான்ஷா
Updated on
1 min read

பிஎஸ்ஏ சார்பில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங், அகான்ஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பிலிப்பின்ஸின் மகாட்டி சிட்டியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் அபய் சிங் தனது முதல் சுற்றில் 11-5, 11-8, 11-8 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ரவி தீக்ஷித்தை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அகான்ஷா சலுங்கே 3-11, 11-9, 13-11, 7-11, 11-9 என்ற செட் கணக்கில் மலேசியவின் நஜியா ஹனிஸை வீழ்த்தினார். அதேநேரத்தில் இந்தியாவின் சுனைனா குருவில்லா 9-11, 5-11, 11-9, 10-12 என்ற செட் கணக்கில் மலேசியவின் ரச்சேல் அர்னால்டிடம் தோல்வி கண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com