உலகின் 2-ஆம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு பிரெஞ்சு ஓபனின்போது முன்னாள் அமெரிக்க வீரர் ஆன்ட்ரே அகஸ்ஸி பயிற்சியளிக்கிறார்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ரோம் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் தோற்ற ஜோகோவிச், அதன்பிறகு கூறியதாவது:
நான் மதிக்கக்கூடியவர்களில் அகஸ்ஸியும் ஒருவர். அவர், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், டென்னிஸ் வாழ்க்கையிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர். பயிற்சியளிப்பது தொடர்பாக அகஸ்ஸியிடம் கடந்த சில வாரங்களாக பேசி வருகிறேன்.
பிரெஞ்சு ஓபனின்போது அவர் பயிற்சியளிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நாள்கள் தொடர முடியாது என தெரிவித்துள்ளார் என்றார்.
8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான அகஸ்ஸி, 2006-இல் சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.