ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா-தென் கொரியா இன்று மோதல்

10-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் புதன்கிழமை நடைபெறும் "சூப்பர் 4 ஸ்டேஜ்' ஆட்டத்தில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதுகின்றன.

10-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் புதன்கிழமை நடைபெறும் "சூப்பர் 4 ஸ்டேஜ்' ஆட்டத்தில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதுகின்றன.
இந்தப் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென் கொரியா மோதும் ஆட்டம் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. 
குரூப் சுற்றில் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் அபார வெற்றி கண்ட இந்திய அணி, இந்த ஆட்டத்தில் தென் கொரியாவை வீழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் தென் கொரியாவையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த அணி தனது பிரிவில் 2-ஆவது இடத்தைப் பிடித்திருந்தாலும், கணிக்க முடியாத வகையில் விளையாடக்கூடிய அணி என்பது குறிப்பிடத்தக்கது. 
பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தானும், மலேசியாவும் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com