தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: வங்கதேச அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான வங்கதேச கிரிக்கெட் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: வங்கதேச அணி அறிவிப்பு


தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. செப்டம்பர் 28-ந் தேதி தொடங்கும் இப்போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை சமன் செய்தது மட்டுமல்லாமல் அந்த அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதன் மூலம் முதன்முறையாக முதல்தர அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி சாதனை படைத்தது.

இதையடுத்து, அதே உற்சாகத்துடன் வங்கதேச அணி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இத்தொடரில் நிச்சயம் சிறப்பான பங்களிப்பை அளிப்போம் என வங்கதேச கேப்டன் கூறினார்.

இந்நிலையில், தனக்கு 6 மாத காலத்துக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்குமாறு வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் கோரிக்கை வைத்தார். இதன்காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. 

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அக்ரம் கான் கூறியதாவது:

ஷகிப் அளித்த கடிதம் தொடர்பாக பரிசீலித்தோம். அவர் எங்கள் அணியின் முக்கிய வீரர். எனவே இதில் அவரின் முடிவை வரவேற்கிறோம். ஷகிப் விரும்பினால் 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் விளையாடலாம் என்றார்.

வங்கதேச அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

முஷ்ஃபிகுர் ரஹீம் (கேப்டன்), தமிம் இக்பால், சௌம்ய சர்கார், இம்ரூல் கயீஸ், சப்பீர் ரஹ்மான், முகமதுல்லா, லிடடன் தாஸ், மெஹிதி ஹாசன், தைஜுல் இஸ்லாம், முஸ்தாஃபிஸூர் ரஹ்மான், ரூபெல் ஹுசைன், ஷைஃபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, சுபாஷிஸ் ராய், மொய்மினுல் ஹக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com