சுடச்சுட

  
  mariappan343x

   

  கிரிக்கெட் வீரர் புஜாரா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள்.

  விளையாட்டுத்துறையில் நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள், விளையாட்டு தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. நிகழாண்டுக்கான அர்ஜூனா விருது, ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாசார்யா விருது, ராஷ்ய கேல் புரோட்ஸஹான் விருது ஆகிய விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  புஜாரா, ஹர்மன்ப்ரீத் கெளர், சாகேத் மைனேனி, மாரியப்பன், விஜே ஸ்வேதா, குஷ்பிர் கெளர், ஆரோக்கிய ராஜிவ், பிரசாந்தி சிங், எஸ்வி சுனில், செளராஸியா, சத்யவ்ரத், ஆண்டனி அமல்ராஜ், பிஎன் பிரகாஷ், ஜஸ்விர் சிங், தேவேந்த்ரோ சிங், பிம்பா தேவி, வருண் பாதி ஆகிய 17 பேரைத் தேர்வுக் குழு அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அர்ஜூனா விருதுக்குத் தேர்வானவர்களை மத்திய அரசு முறைப்படி அறிவிக்கவுள்ளது.

  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரரான மாரியப்பன், கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்றார்.

  இந்த வருடத் தொடக்கத்தில் மாரியப்பனைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்தது. தற்போது அர்ஜூனா விருதைப் பெறவுள்ளார் மாரியப்பன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai