சுடச்சுட

  

  டி20 கிரிக்கெட்டை நான் உருவாக்கினேன்: கிறிஸ் கெயில் பெருமிதம்!

  By எழில்  |   Published on : 11th August 2017 11:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gayle11

   

  டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் அடித்த முதல் வீரர் கிறிஸ் கெயில். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவர்தான் முதலிடத்தில் உள்ளார்.

  முதல்முறையாக டி20 சதம், அதிக டி20 ரன்கள் (175*), அதிவேக அரை சதம் (யுவ்ராஜுடன் இணைந்து) என பல சாதனைகளுக்கு அவரே சொந்தக்காரர். 51 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 1537 ரன்கள் எடுத்துள்ளார். 

  கரீபியன் பிரீமியர் லீக் தொடர்பாக அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: டெஸ்ட், 50 ஓவர் போட்டிகளை மறந்துவிடுங்கள், நாம் இப்போது டி20 போட்டியில் ஈடுபடுகிறோம். எனக்காக டி20 உருவாக்கப்பட்டது என்பதை விடவும் நான் டி20 போட்டியை உருவாக்கினேன் என்று கூறலாம்.

  டி20 கிரிக்கெட்டைப் படைத்தவராக மற்ற வீரர்களுக்கு நான் சொல்ல வருவது - டி20 போட்டியினாலும் ஒரு வாழ்க்கை உண்டு. பேட்டிங் வழியாக டி20 கிரிக்கெட்டில் சாதிக்கமுடியும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai