சுடச்சுட

  
  Ashwin

   

  இந்தியாவின் நட்சத்திர வீரராகவும், உலகின் தலைசிறந்த முன்னணி ஆல்-ரவுண்டராகவும் திகழ்பவர் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறார். 

  தற்போது இலங்கை அணியுடன் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 17 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு இன்னிங்ஸில் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது அதிகபட்சமாகும். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ஜொலித்தார். 

  ஆனால், அடுத்து நடக்கவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

  இந்நிலையில், இங்கிலாந்தின் உள்ளூர் கவுன்டி அணியில் விளையாட அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் வார்சிட்ஷைர் அணி நடப்பு சீசனில் விளையாட அஸ்வினை ஒப்பந்தம் செய்தது. 

  ஆகஸ்ட் 28-ந் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இருந்தே பங்கேற்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  முன்னதாக புஜாரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரும் இங்கிலாந்து கவுன்டி அணிகளுக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார்கள். அதுபோல நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடமும் கவுன்டி அணி ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai