சுடச்சுட

  

  'சுதந்திர தினத்தை தாண்டி இது எனக்கு ஒரு சிறப்பான நாள்'- விராட் கோலி 

  By DIN  |   Published on : 15th August 2017 07:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Virat_Kohli_on_I-day

   

  நாடு முழுவதும் 71-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ந் தேதி (இன்று) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதுதொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நாட்டின் 71-ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு இலங்கையின் கண்டியில் தேசியக் கொடி ஏற்றினார்.

  இந்நிலையில், 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விராட் கோலி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டார்.

  அதில் அவர் பேசியதாவது:

  எல்லோருக்கும் வணக்கம். அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நான் என்றுமே இந்தியன்தான். ஆனால், இந்த ஒரு நாளில் என் இதயத்தில் இருந்து இந்தியன் என்ற சிறப்பு பெருமைக்கு உரியாதகவே உள்ளது.

  இன்றைய தினம் சுதந்திர தினம் என்பதை தாண்டி தனிப்பட்ட முறையில் எனக்கு எனது குடும்பத்துக்கும் இது சிறப்பான நாளாகும். ஆம், இன்று என்னுடைய தந்தையின் பிறந்த தினமும் கூட.

  சுதந்திர தினத்துடன் என் தந்தையின் பிறந்த தினமும் சேர்ந்து வருவதில் எங்கள் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த திருநாளில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை நினைவுகூற வேண்டும்.

   

  அது, தில்லியில் எங்கள் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பட்டம் விட்டு விளையாடியதுதான். நாடு முழுவதும் இன்று உயரப் பறக்கும் தேசியக் கொடியைப் பார்க்கும் போது புதிய உற்சாகம் பிறக்கும். நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த் என்றார்.

  தில்லி அணிக்காக உள்ளூர் போட்டி ஒன்றில் விராட் கோலி விளையாடிக் கொண்டிருக்கும் போதுதான் அவரது தந்தை காலமானார். இச்செய்தியை அறிந்த பின்னர் கூட அன்றைய போட்டியில் சற்றும் மனம் தளராமல் தன் பங்களிப்பை அளித்துவிட்டுத்தான் வீடு திரும்பினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai