சுடச்சுட

  

  வாய்த்துடுக்கால் வலிய சிக்கிய ஸ்டோக்ஸ்: ஐசிசி அபராதம்

  By DIN  |   Published on : 27th August 2017 05:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Ben-Stokes2708

   

  இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

  இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்று 1-0 என முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் ஹெட்டிங்லியில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

  இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கின் போது 101-ஆவது ஓவரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், எதிரணி வீரருடன் வாய்த் தகராறில் ஈடுபட்டார்.

  பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஷாய் ஹோப் பேட்டில் உரசிக்கொண்டு பவுண்டரிக்கு பறந்தது. இதனால் கோபமடைந்த ஸ்டோக்ஸ், ஷாய் ஹோப்புடன் வாய்த்தகராறில் ஈடுபட்டார். மேலும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர்.

  இதனை சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்களிடம் நடந்த விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.

  இதையடுத்து ஐசிசி விதி 7.6-ன் படி ஒரு புள்ளி அபராதமாக விதிக்கப்பட்டது. முன்னதாக, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 3 அபராதப் புள்ளிகள் பெற்றுவிட்டார்.

  இதனால் மேற்கொண்டு ஒருபுள்ளி பெற்றால் கூட அடுத்து விளையாடவுள்ள ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது 2 டி20 என ஏதோனும் ஒன்றில் விளையாட தடை விதிக்கப்படும்.

  இந்தப் புள்ளிகள் உயரும் பட்சத்தில் தடைக் காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் தண்டனையும் கடுமையாக வழங்கப்படலாம். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai