சுடச்சுட

  

  சிந்து - ஒகுஹரா இறுதிப்போட்டி: பரபரப்பை ஏற்படுத்திய 73 ஷாட்கள் ரேலி (வீடியோ)

  By எழில்  |   Published on : 28th August 2017 11:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sindu8171

   

  உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். முன்னதாக நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட சிந்து 19-21, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சிந்து முன்னேறியது இது முதல் முறையாகும். இதில் அவர் தங்கம் வென்றிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.

  ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் நஜோமியை எதிர்கொண்டார் சிந்து. இதில் முதல் 2 செட்களை முறையே நஜோமி, சிந்து கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டின் ஒவ்வொரு கேமிலும் இருவருமே கடுமையாக போட்டியிட்டதால், ஆட்டத்தின் பரபரப்பு இறுதிவரை நீடித்தது. எனினும் இறுதியில் நஜோமி வெற்றியை தனதாக்கினார். அரையிறுதியில் சாய்னாவை வீழ்த்திய நஜோமி, இறுதிச்சுற்றில் சிந்துவை வீழ்த்தியுள்ளார். நவோமி - சிந்து இதுவரை 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் தற்போது நஜோமி 4, சிந்து 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். ரியோ ஒலிம்பிக், சிங்கப்பூர் ஓபன் ஆகியவற்றில் நவோமியை சிந்து வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இந்தப் போட்டியில் இருவரும் கடுமையான போட்டி மனப்பான்மையில் விளையாடினார்கள். ஒருசமயம் இருவரும் 73 ஷாட்கள் அடங்கிய ரேலியை விளையாடி பார்வையாளர்களை அசத்தினார்கள். இந்தப் புள்ளியில் சிந்து வெற்றி பெற்றாலும் அதைக் கொண்டாட முடியாத அளவுக்கு அவர் சோர்ந்து போயிருந்தார். இந்தப் பரபரப்பான தருணத்தைக் கண்டுகளியுங்கள்.

   

  Performance Of The Day | Badminton Day 7 Finals – TOTAL BWF World Championships 2017 Match 2 – WS | Pusarla V. Sindhu vs Nozomi Okuhara #badminton #TOTALBWFWC2017 #2017BWC

  Dikirim oleh BWF — Badminton World Federation pada 27 Agustus 2017

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai