சுடச்சுட

  

  மலிங்கா 300 விக்கெட்டுகள்: முரளிதரனுக்குப் பின்னால், வாஸூக்கு முன்னால்!

  By எழில்  |   Published on : 31st August 2017 05:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  malinga123

   

  இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 4-வது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

  டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், இதுவரை விளையாடாதவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்குர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். மேலும் குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சஹால், ஜாதவ், புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது

  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆரம்பம் முதல் அசத்தலாக விளையாடி வந்த கோலி, 76 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 29-வது சதமாகும். ஒருநாள் போட்டிகளில் அவரை விடவும் சச்சின் (49), பாண்டிங் (29) மட்டுமே அதிக சதங்களை எடுத்துள்ளார்கள்.

  ஆட்டத்தின் பாதியிலேயே கோலி சதமெடுத்ததால் அவர் நிச்சயம் இரட்டைச் சதமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலி 131 ரன்களில் மலிங்காவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இது மலிங்காவின் 300-வது ஒருநாள் விக்கெட்டாகும். 

  மலிங்கா 300

  100-வது விக்கெட் - கப்தில், 2010
  200-வது விக்கெட் - தோனி, 2012
  300-வது விக்கெட் - கோலி, 2017

  குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகள்

  171 பிரெட் லீ
  186 வக்கார் யூனூஸ் 
  200 மெக்ராத் 
  202 முரளிதரன் 
  203 மலிங்கா
  208 வாசிம் அக்ரம்

  குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகள்: இலங்கை வீரர்கள்

  202 - முரளிதரன் 
  203 - மலிங்கா 
  235 - வாஸ்
  294 - ஜெயசூர்யா 

  * ஒருநாள் போட்டியில் மலிங்கா வீழ்த்திய பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் எடுத்தவர் கோலி - 131 ரன்கள்.

  TAGS
  Malinga
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai