ஆடுகளத்துக்குள் அத்துமீறி நுழைந்த கார்: ரெய்னா, இஷாந்த் சர்மா கடும் அதிருப்தி!

பாதுகாப்பு வளையங்களை மீறியபடி அந்த நபர் காரை ஓட்டி வந்ததைக் கண்ட வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்...
ஆடுகளத்தில் அத்துமீறி நுழைந்த கார்.
ஆடுகளத்தில் அத்துமீறி நுழைந்த கார்.

தில்லியில் பாலம் விமானப் படை மைதானத்தில் தில்லி-உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தின்போது, ஒருவர் ஆடுகளத்துக்குள்ளாக காரை ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு வளையங்களை மீறியபடி அந்த நபர் காரை ஓட்டி வந்ததைக் கண்ட வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆட்டத்தில் கெளதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த் ஆகிய இந்திய அணி வீரர்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச பதிவெண் கொண்ட அந்த காரை கிரிஷ் சர்மா என்ற நபர் ஓட்டி வந்துள்ளார். மைதானத்தின் பிரதான வாயிலில் பணியில் இருக்க வேண்டிய காவலர், அந்த நேரத்தில் அங்கு இல்லாமல் போனதை அடுத்து, கிரிஷ் சர்மா காரை மைதானத்துக்கு ஓட்டி வந்துள்ளார். பார்க்கிங் பகுதிக்குச் செல்வதற்கு பதிலாக அவர் மைதானத்துக்குள் புகுந்துள்ளார். சம்பவத்தை அடுத்து தில்லி போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பம் குறித்து போட்டியில் பங்கேற்றுள்ள இஷாந்த் சர்மா, ரெய்னா ஆகிய வீரர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

ட்விட்டரில் இஷாந்த் சர்மா கூறியதாவது: டிரைவ் இன் தியேட்டர் தற்போது டிரைவ் இன் மேட்ச் ஆக முன்னேறிவிட்டது. ரஞ்சிப் போட்டியில் கெளதம் கம்பீருடன் இணைந்து கண்ட இக்காட்சியால் அதிர்ச்சிக்கு ஆளானேன் என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ரெய்னா தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இதுபோல எங்கள் ரஞ்சிப் போட்டி தடைபட்டது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக, வீரர்களும் அனைவரும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்றார்.

பாதுகாப்பு அச்சுறுத்தலாக நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com