முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா காலமானார்!
By எழில் | Published on : 20th November 2017 05:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

செக் குடியரசைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா காலமாகியுள்ளார். அவருக்கு வயது 49.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோவோட்னா, சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் 1998-ல் விம்பிள்டன் பட்டத்தை வென்ற நோவோட்னா, இரட்டையர் பிரிவில் 16 கிராண்ட்ஸ்லாம்களைப் பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து முன்னணி டென்னிஸ் வீராங்கனையாகத் திகழ்ந்தவர்.
நோவோட்னாவின் மறைவுக்கு டென்னிஸ் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.