5 நாள்களும் ஈடன் கார்டன்ஸில் பேட்டிங் செய்து சாதனை செய்த புஜாரா! 

5 நாள்களும் பேட்டிங் செய்த 9-வது வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்...
5 நாள்களும் ஈடன் கார்டன்ஸில் பேட்டிங் செய்து சாதனை செய்த புஜாரா! 

கொல்கத்தாவில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா 5 நாள்களும் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார். இதுபோல 5 நாள்களும் பேட்டிங் செய்த 9-வது வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜெய்சிம்ஹா, ரவி சாஸ்திரிக்குப் பிறகு இதுபோல விளையாடிய 3-வது இந்தியர், புஜாரா.

கொல்கத்தா டெஸ்டில் முதல் நாளன்று புஜாரா 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். மழையால் 2-வது நாளும் பாதிக்கப்பட்டதால் அந்த நாளின் முடிவில் 47 ரன்களுடன் களத்தில் இருந்த புஜாரா 3-ம் நாளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் நான்காவது நாளான நேற்று 2 ரன்களுடன் களத்தில் இருந்தார் புஜாரா. 5-வது நாளான இன்று 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அவர் 5 நாள்களும் பேட்டிங் செய்து சாதனை செய்துள்ளார்.

புஜாரா - ஈடன் கார்டன்ஸில்

முதல் நாள்: 32 பந்துகளில் 8* ரன்கள் 
2-ம் நாள்: 70 பந்துகளில் 39* ரன்கள் 
3-வது நாள்: 15 பந்துகளில் 5 ரன்கள் 
4-வது நாள்: 9 பந்துகளில் 2* ரன்கள் 
5-வது நாள்: 42 பந்துகளில் 20 ரன்கள்

5 நாள்களும் பேட்டிங் செய்த இந்திய வீரர்கள்

எம்.எல். ஜெய்சிம்ஹா v ஆஸ்திரேலியா, கொல்கத்தா, 1960
ரவி சாஸ்திரி v இங்கிலாந்து, கொல்கத்தா, 1984
புஜாரா v இலங்கை, கொல்கத்தா, 2017

5 நாள்களும் பேட்டிங் செய்த வீரர்கள்

எம்.எல். ஜெய்சிம்ஹா
பாய்காட்
கிம் ஹியூக்ஸ்
ஆலன் லாம்ப்
ரவி சாஸ்திரி
கிரிஃபித்
ஃபிளிண்டாஃப்
ஆல்விரோ பீட்டர்சன்
புஜாரா

ஆனால் இந்த 9 பேட்ஸ்மேன்களில் ஐந்து நாள்களும் விளையாடி குறைந்த ரன்கள் எடுத்தவர் புஜாரா. முதல் இன்னிங்ஸில் 52 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்னும் எடுத்து இந்த டெஸ்டில் அவர் 74 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு இந்திய வீரர் ஜெய் சிம்ஹா 94 ரன்கள் (20* & 74) எடுத்ததே ஐந்து நாள்களும் பேட்டிங் செய்து எடுத்த குறைந்த ரன்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com