Enable Javscript for better performance
Pvsindhu is into the semi-finals of the HongkongSS- Dinamani

சுடச்சுட

    

    ஹாங்காங் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

    By எழில்  |   Published on : 24th November 2017 05:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sindhu2

     

    ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் அயா ஒஹோரியை வீழ்த்திய போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிந்து, காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்டார். 

    உலகளவிலான தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள அகானேவை  21-12, 21-19 என்ற நேர் செட்களில் தோற்கடித்து பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai