ஆஷஸ் முதல் டெஸ்ட்: வெற்றி விளிம்பில் ஆஸ்திரேலியா

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை வேகமாக நெருங்கி வருகிறது.
ஆஷஸ் முதல் டெஸ்ட்: வெற்றி விளிம்பில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான புகழ்பெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காப்பா மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அறிமுக வீரர் வின்ஸ், சிறப்பாக ஆடி 83 ரன்கள் சேர்த்தார். ஸ்டோன்மேன் 53, மாலன் 56 ரன்கள் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதன் கேப்டன் ஸ்மித் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 141 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதனால் ஆஸ்திரேலியா 328 ரன்கள் எடுத்தது.

26 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தது. கேப்டன் ஜோ ரூட் மட்டும் 51 ரன்கள் சேர்த்தார். இதனால் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்குச் சுருண்டது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், ஹாசில்வுட், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், 170 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், பென்க்ராஃப்ட் ஜோடி அதிரடி துவக்கத்தை ஏற்படுத்தியது. வார்னர் 60 ரன்களுடனும், பென்க்ராஃப்ட் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 1 நாள் ஆட்டமும், 10 விக்கெட்டுகளும் உள்ள நிலையில், 56 ரன்களே பின்தங்கியுள்ளதால் ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com