இலங்கை அணியில் அதிரடி மாற்றம்: ஒருநாள் & டி20 தொடர்களுக்கான கேப்டனாக திசாரா பெரேரா நியமனம்!

தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஒயிட்வாஷ் ஆனது இலங்கை அணி... 
இலங்கை அணியில் அதிரடி மாற்றம்: ஒருநாள் & டி20 தொடர்களுக்கான கேப்டனாக திசாரா பெரேரா நியமனம்!

3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்டில் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக 28 வயது திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இலங்கை ஒருநாள் அணி கேப்டனாக உபுல் தரங்கா பணியாற்றினார். அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பு பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலையில் கேப்டன் பொறுப்பிலிருந்து மேத்யூஸ் விலகியபோது டெஸ்ட் அணி கேப்டனாக தினேஷ் சண்டிமலும் ஒருநாள் அணி கேப்டனாக உபுல் தரங்காவும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஒயிட்வாஷ் ஆனது இலங்கை அணி. 

பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் பங்கேற்க தரங்கா மறுத்தார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை டி20 அணிக்கு கேப்டனாக திசாரா பெரேரா நியமிக்கப்பட்டார். அந்த டி20 தொடரிலும் இலங்கை அணியால் ஒரு ஆட்டங்களிலும் வெல்லமுடியாமல் 0 - 3 எனத் தோற்றுப்போனாலும் தேர்வுக்குழுவினருக்கு பெரேராவின் தலைமைப்பண்பு மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களின் கேப்டனாக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com