பிரிமியர் லீக் கால்பந்து பட்டத்தை வென்றது மான்செஸ்டர் சிட்டி

கால்பந்து பிரிமியர் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது.
கால்பந்தை வசப்படுத்த முயலும் மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள்.
கால்பந்தை வசப்படுத்த முயலும் மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள்.

கால்பந்து பிரிமியர் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது.
இங்கிலீஷ் கால்பந்து லீக் போட்டிகள் பிரிமியர் லீக் என அழைக்கப்படுகின்றன. இதில் பல்வேறு முன்னணி கால்பந்து கிளப்புகளள் இடம்பெற்று விளையாடுகின்றன. இதில் அதிகபட்சமாக மான்செஸ்டர் யுனைடெட் அணி 13 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கிடையே நிகழாண்டு பிரிமியர் லீக் கால்பந்து சாம்பியன் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது. தொடர்ந்து 5 போட்டிகளில் இந்த அணி வென்றுள்ளது.
இந்நிலையில் சிட்டி அணியின் பரம வைரியான மான்செஸ்டர் யுனைடெட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்பிரெளன்விச் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com