டிஎன்பிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு உங்கள் ஊர் அணி தகுதி பெற்றுள்ளதா?: முன்னாள் சாம்பியன்கள் வெளியேற்றம்!

டிஎன்பிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுபெற்றுள்ளன. இதையடுத்து நான்கு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன...
டிஎன்பிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு உங்கள் ஊர் அணி தகுதி பெற்றுள்ளதா?: முன்னாள் சாம்பியன்கள் வெளியேற்றம்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுபெற்றுள்ளன. இதையடுத்து நான்கு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.

கிரிக்கெட்டில் மாநில அளவில் புதிய இளம் வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் டிஎன்பிஎல் பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை, காஞ்சி வீரன்ஸ் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தேர்வு செய்யப்படும். மொத்தம் 32 ஆட்டங்கள் என 33 நாள்களில் நடத்தப்படும்.   

(டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு முந்தைய வருடம், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், டிஎன்பிஎல் போட்டியின் முதல் சாம்பியன் என்கிற பெருமையைப் பெற்றது.

இந்நிலையில் இந்த வருடத்துக்கான கடைசி லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. திருநெல்வேயில் நடைபெற்ற விபி காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. காரைக்குடி காளைக்கு எதிரான ஆட்டத்தில் டூட்டி பேட்ரியட்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எனினும் நேற்று வெற்றி பெற்ற திருச்சி, தூத்துக்குடி ஆகிய இரு அணிகளாலும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியாமல் போனது. 

லீக் சுற்றுகளின் முடிவில், திண்டுக்கல், மதுரை ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. கோவை, காரைக்குடி, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நான்கு அணிகளும் தலா 8 புள்ளிகள் கொண்டிருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் கோவை, காரைக்குடி ஆகிய அணிகள் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. காஞ்சி, சேப்பாக்கம் ஆகிய இரு அணிகளும் மிக மோசமாக விளையாடி தலா 2 புள்ளிகள் மட்டும் பெற்று கடைசி இரு இடங்களைப் பெற்றுள்ளன. இதையடுத்து திண்டுக்கல், மதுரை, கோவை, காரைக்குடி ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. முன்னாள் சாம்பியன்களான சேப்பாக்கம், தூத்துக்குடி ஆகிய இரு அணிகளும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறாததால், இந்தமுறை புதிய அணி டிஎன்பிஎல் சாம்பியனாக முடிசூடவுள்ளது. 

திருநெல்வேலியில் நாளை நடைபெற்றவுள்ள முதல் பிளேஆஃப் போட்டியில் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய அணிகள் மோதவுள்ளன. அடுத்த நாளன்று, கோவை, காரைக்குடி ஆகிய அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 10 அன்று திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள கடைசி பிளேஆஃப் போட்டி நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com