செய்திகள்
ஆசியப் போட்டி: கூடைப்பந்து, ஹேண்ட்பாலில் இந்தியா தோல்வி
ஆசியப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற கூடைப்பந்து, ஹேண்ட்பால் போட்டிகளில் இந்திய அணிகள் தோல்வியைத் தழுவின.
ஆசியப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற கூடைப்பந்து, ஹேண்ட்பால் போட்டிகளில் இந்திய அணிகள் தோல்வியைத் தழுவின.
குரூப் ஏ பிரிவில் மகளிர் கூடைப்பந்து ஆட்டம் ஒன்றில் இந்தியாவும்-கஜகஸ்தானும் மோதியதில் 61-79 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோற்றது இந்தியா. அடுத்த ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சீன தைபேவையும், 20-இல் ஒருங்கிணைந்த கொரியா, 23-இல் இந்தோனேஷியா அணிகளை எதிர்கொள்கிறது.
ஹேண்ட்பால் போட்டியில் இந்திய ஆடவர் அணி 29-40 என்ற புள்ளிக்கணக்கில் இராக் அணியிடம் தோல்வியுற்றது. ஏற்கெனவே சீன தைபே, பஹ்ரைன் நாடுகளிடம் இந்தியா தோல்வியுற்றது.