பெர்த் டெஸ்ட்: ஸ்டார்க்குக்கு உதவி செய்ய மிச்செல் ஜான்சன் விருப்பம்

பெர்த்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்டில் ஆஸி. வீரர் மிச்செல் ஸ்டார்க்குக்கு உதவி செய்ய உள்ளதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
பெர்த் டெஸ்ட்: ஸ்டார்க்குக்கு உதவி செய்ய மிச்செல் ஜான்சன் விருப்பம்


பெர்த்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்டில் ஆஸி. வீரர் மிச்செல் ஸ்டார்க்குக்கு உதவி செய்ய உள்ளதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை 16-ஆம் தேதி பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. 
வேகப்பந்து வீச்சுக்கு பெயர் பெற்ற ஆஸி. மைதானங்களிலேயே அதன் வீரர்கள் ஒரளவுக்கு தான் சிறப்பாக பந்துவீசினர். பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் முதல் இன்னிங்ஸில் 2, இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டை சாய்த்தார். பெர்த் மைதான பிட்ச் வேகம் மற்றும் பெளன்சருக்கு பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் முன்னாள் வீரர் ஜான்சன் கூறியதாவது:
ஸ்டார்க் இன்னும் சிறப்பாக பந்து வீச வேண்டும். அவரது மனதில் ஏதோ ஒன்று செயல்படவிடாமல் தடுக்கிறது. அவருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளேன். முன்பு அவருடன் இணைந்து ஆடியுள்ளேன். பெர்த் டெஸ்ட் தொடங்கும் முன்பு ஸ்டார்க்குக்கு உரிய ஆலோசனை வழங்குவேன். பெர்த் மைதானம் ஸ்டார்க்கின் திறமைக்கு ஒத்துழைக்கும் என்றார் ஜான்சான்.
ஏற்கெனவே கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட ஸ்டார்க், மைதானத்தில் உள்ள சீரற்ற தன்மையால் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது அச்சத்தில் உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com