ரஞ்சி கோப்பை: சுபமன் கில் 268; பஞ்சாப் 479

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் தனது முதல் இன்னிங்ஸில்118.5 ஓவர்களில் 479 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் தனது முதல் இன்னிங்ஸில்118.5 ஓவர்களில் 479 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 71 ரன்கள் எடுக்க, பஞ்சாப் தரப்பில் மன்பிரீத் கோனி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப், சனிக்கிழமை முடிவில் 79 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் விளாசியிருந்தது. சுபமன் கில் 199, மன்தீப் 50 ரன்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை தொடங்கினர். 
இதில் மன்தீப் கூடுதல் ரன்கள் சேர்க்காமல் வெளியேற, சுபமன் கில் இரட்டைச் சதம் கடந்து 268 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிய, பஞ்சாப் ஆட்டம் 479 ரன்களுக்கு முடிந்தது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் 6 விக்கெட் சாய்த்தார்.
பின்னர் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 46 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் இந்திரஜித் 37, சாய் கிஷோர் ரன்கள் இன்றி களத்தில் உள்ளனர். முன்னதாக அபினவ் முகுந்த் 74, ஜெகதீசன் 50 ரன்கள் சேர்த்திருந்தனர். பஞ்சாபுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு தற்போது 98 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com