இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மூவர் பெயர்கள் பரிந்துரை!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு  டபிள்யூ வி ராமன், வெங்கடேஷ் பிரசாத், கேரி கிறிஸ்டன் ஆகிய மூவரின் பெயர்களை...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மூவர் பெயர்கள் பரிந்துரை!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு  டபிள்யூ வி ராமன், வெங்கடேஷ் பிரசாத், கேரி கிறிஸ்டன் ஆகிய மூவரின் பெயர்களைத் தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. 

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே மோதல் ஏற்பட்டது. போட்டி முடிவுற்ற நிலையில் கடந்த நவம்பர் 30ஆம் தேதியோடு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. எனினும்,  மகளிர் அணி வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிந்து ஒரு தரப்பு ரமேஷ் பவார் நீடிக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பு புதிய பயிற்சியாளரை நியமிக்கவும் வலியுறுத்தியது.

இதற்கிடையே புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது. இதற்காக கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட். மூத்த வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட மூவர் தேர்வுக்குழு நியமிக்கப்பட்டது. 

கேரி கிரிஸ்டன், ஹெர்ஸ்செல் கிப்ஸ், ரமேஷ் பவார், டபிள்யு வி.ராமன், மனோஜ் பிரபாகர், வெங்கடேஷ் பிரசாத், டிரென்ட் ஜான்சன், மார்க் கோல்ஸ், டமிட்ரி மஸ்காரனெஸ், பிராட் ஹாக் உள்பட 28 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. இறுதியில் டபிள்யூ வி ராமன், வெங்கடேஷ் பிரசாத், கேரி கிறிஸ்டன் ஆகிய மூன்று பேரை இறுதிச்சுற்றுக்குப் பரிந்துரை செய்துள்ளது மூவர் தேர்வுக்குழு. இதனால் ரமேஷ் பவார் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

இதையடுத்து இந்திய மகளிர் அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் பெயரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com