சச்சின் சாதனைகளை நெருங்கும் கோலி! 34-வது சதம் நிகழ்த்திய அற்புதங்கள்!

49 ஒருநாள் சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொட கோலிக்கு இன்னும்...
சச்சின் சாதனைகளை நெருங்கும் கோலி! 34-வது சதம் நிகழ்த்திய அற்புதங்கள்!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி 34-வது சதம் பதிவு செய்தார்.

கேப் டவுனில் புதன்கிழமை நடைபெற்ற 3-வது ஒரு நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா, முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 179 ரன்களில் சுருண்டது.

கேப்டனாக 12-வது சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட வேறு எந்த வீரரும் இத்தனை சதங்களைப் பதிவு செய்ததில்லை. அதிக ஒருநாள் சதம் எடுத்த வீரர்களின் பட்டியலில் 49 ஒருநாள் சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொட கோலிக்கு இன்னும் 15 சதங்கள் தேவை. 

* இது விராட் கோலியின் 34-வது சதம். 205 ஆட்டங்களில் 9348 ரன்கள் எடுத்துள்ளார். 

விராட் கோலியின் பேட்டிங் சராசரி

53.40 - டெஸ்டுகள்
57.34 - ஒருநாள் போட்டிகள்
52.86 - டி20 போட்டிகள்

இன்னிங்ஸ்/சதங்கள் (குறைந்தபட்சம் 8 ஒருநாள் சதங்கள்)

5.79 - விராட் கோலி
6.04 - ஆம்லா
6.92 - குயிண்டன் டி காக் 
7.43 - வார்னர்
8.17 - ஷிகர் தவன்

* நேற்று 160 ரன்கள் எடுத்த கோலி, அதில் 100 ரன்களை ஓடி எடுத்தார். இதற்கு முன்னால் இந்திய வீரர்களில் 1999-ல் இலங்கைக்கு எதிராக கங்குலி 98 ரன்கள் ஓடி எடுத்ததே சாதனையாக இருந்தது.

கோலி எடுத்த 160 ரன்களில் 75 ஒரு ரன்கள், 22 இரு ரன்கள், 3 மூன்று ரன்கள் என 100 ரன்களுக்கு ஓடியுள்ளார் கோலி. 

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் ஓடி எடுத்தவர்கள்

கேரி கிறிஸ்டன் - 112 ( எடுத்த ரன்கள் - 188)
டு பிளெஸ்ஸிஸ் - 103 (185)
கில்கிறிஸ்ட் - 102 (172)
கப்தில் - 101 (189)
கோலி - 100 (160*)

* நேற்று 2 சிக்ஸர்கள் எடுத்தார் கோலி. இதன்மூலம் ஒருநாள் போட்டியில் தனது 100-வது சிக்ஸரை எடுத்துள்ளார். 

* முதலில் பேட்டிங் செய்யும்போது 2015-ல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 138 ரன்கள் எடுத்ததே கோலி முதலில் ஆடி எடுத்த அதிகபட்ச ரன்கள். இதை நேற்று முறியடித்து 160 ரன்கள் எடுத்தார் கோலி. 

* அதேபோல 2012-ல் கோலி 148 பந்துகளை எதிர்கொண்டதே ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாகும். நேற்று 159 பந்துகளை எதிர்கொண்டு 160 ரன்கள் எடுத்தார். 

* தென் ஆப்பிரிக்காவில் இரு நாடுகளுக்கு இடையிலான 7 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2001-02-ல் ரிக்கி பாண்டிங் 283 ரன்கள் எடுத்தார். அதைத் தாண்டி இந்தத் தொடரில் கோலி இதுவரை 318 ரன்கள் எடுத்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள்

160* - விராட் கோலி vs தென் ஆப்பிரிக்கா, 2018
152 - சச்சின் vs நபிமியா, 2003
146 - சச்சின் vs கென்யா, 2001
127 - கங்குலி vs தென் ஆப்பிரிக்கா, 2001

கேப்டனாக அதிக ஒருநாள் சதங்கள் எடுத்தவர்கள்

பாண்டிங் - 22 (220 இன்னிங்ஸ்)
டி வில்லியர்ஸ் - 13 (98)
விராட் கோலி - 13 (43)
கங்குலி - 11 (143)

இந்திய கேப்டனாக அதிக சதங்கள் 

டெஸ்ட் - விராட் கோலி (14 சதங்கள் 57 இன்னிங்ஸில்)

ஒருநாள் - விராட் கோலி (12 சதங்கள் 43 இன்னிங்ஸில்)

அதிக ஒருநாள் சதங்கள்

சச்சின் - 49 (452 இன்னிங்ஸ்)
கோலி - 34 (197)
பாண்டிங் - 30 (365)
ஜெயசூர்யா - 28 (433)
ஆம்லா - 26 (158)

அதிக சதங்கள் (டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றும் சேர்த்து)

சச்சின் - 100
பாண்டிங் - 71
சங்கக்காரா - 63
காலிஸ் - 62
கோலி - 55

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com