பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ள இந்தியா, அதில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையையும், ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே அணியையும், நியூஸிலாந்து-கென்யாவையும், தென் ஆப்பிரிக்கா மேற்கிந்தியத் தீவுகளையும் புதன்கிழமை வென்றன.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை வென்றது.
19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணியில், காயமடைந்துள்ள இஷான் பொரெலுக்கு பதிலாக ஆதித்யா தாக்கரே சேர்க்கப்பட்டுள்ளார்.