சர்வதேச செஸ்: ஆனந்த் தோல்வி

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தனது 7-ஆவது சுற்றில் ரஷியாவின் விளாதிமீர் கிராம்னிக்கிடம் தோல்வி கண்டார்.

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தனது 7-ஆவது சுற்றில் ரஷியாவின் விளாதிமீர் கிராம்னிக்கிடம் தோல்வி கண்டார்.
 இந்த ஆட்டத்தில் ஆனந்தை மிகத் திறமையாக எதிர்கொண்ட கிராம்னிக், தனது 36-ஆவது நகர்த்தலில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். முன்னதாக போட்டி வரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த ஆனந்த், இந்தத் தோல்வி காரணமாக 6-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளார். அவர் அந்த இடத்தை ரஷியாவின் செர்கே கர்ஜகினுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
 இப்போட்டியில் பங்கேற்றுள்ள இதர இந்தியர்களில் ஒருவரான அதிபன், ரஷியாவின் மேக்ஸிம் மட்லாகோவுடனான ஆட்டத்தை சமன் செய்தார். விதித் குஜராத்தி, ஹோலாந்தின் லூகாஸ் வேன் ஃபோரீஸ்டுடனான ஆட்டத்தை டிரா செய்தார். ஹரிகா, ஜெர்மனியின் மதியாஸ் புலுபாமிடம் வீழ்ந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com