குரூப் எப் பிரிவில் மெக்ஸிகோ அணியுடன் தான் மோதிய 3 உலகக் கோப்பை ஆட்டங்களிலும் தென்கொரியா தோல்வி அடைந்துள்ளது.
மெக்ஸிகோ அணி அனுபவ வீரர்கள் நிறைந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. அதே நேரத்தில் தென்கொரியா முதல் ஆட்டத்தில் ஸ்வீடனுடன் தோல்வியை சந்தித்தது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளன.