வெற்றியுடன் விடை பெற்றார் வேய்ன் ரூனி

அமெரிக்காவுடன் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இங்கிலாந்து அணியில் தனது கடைசி ஆட்டத்துடன் விடை பெற்றார் நட்சத்திர வீரர் வேய்ன் ரூனி.
வெற்றியுடன் விடை பெற்றார் வேய்ன் ரூனி


அமெரிக்காவுடன் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இங்கிலாந்து அணியில் தனது கடைசி ஆட்டத்துடன் விடை பெற்றார் நட்சத்திர வீரர் வேய்ன் ரூனி.
இங்கிலாந்து கால்பந்து வீரர்களில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ள ரூனி தற்போது அமெரிக்காவில் கால்பந்து லீக் போட்டியில் ஆடி வருகிறார். 33 வயதான அவர் 120-ஆவது முறையாக இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் வியாழக்கிழமை இரவு அமெரிக்காவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி முறையாக ரூனி கேப்டனாக செயல்பட்டார்.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என வென்றது. லின்கார்ட், டிரென்ட் அலெக்சாண்டர், வில்சன் ஆகியோர் கோலடித்தனர்.
ஆட்ட முடிவில் சக கால்பந்து வீரர்கள், மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரூனியை பாராட்டி வழியனுப்பினர்.
இதுதொடர்பாக ரூனி கூறியதாவது: இங்கிலாந்து அணி சிறந்த இளம் வீரர்களுடன் சிறந்த எதிர்காலம் கொண்டதாக உள்ளது. ரஷிய உலகக் கோப்பை அரையிறுதியில் எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவியது. எனது கோல் சாதனையை கேப்டன் ஹாரி கேன் முறியடிப்பார். பயிற்சியாளர் செளத்கேட் சிறப்பாக அணியை கட்டமைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com