லண்டனில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கால்பந்து நட்பு ஆட்டத்தில் பிரேஸில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது. தென் அமெரிக்க அணிகளான இரு அணிகளும் பல்வேறு நாடுகளில் நட்பு ஆட்டங்களில் ஆடி வருகின்றன. இதன்படி லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேஸில் பார்வர்ட் நெய்மர் 76-ஆவது நிமிடத்தில் அடித்த கோலால் 1-0 என வெற்றி பெற்றது. இது நெய்மர் அடித்த 60-ஆவது சர்வதேச கோலாகும்.